ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அடுத்த மாதத்திற்குள் தனது கட்சியின் தேசிய பட்டியில் ஆசனத்தை ஏற்றுக் கொள்வார் என்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகமனதான முடிவின்பேரில் ரணில் விக்ரமசங்க எதிர்காலத்தில் பாராளுமன்றில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.

காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.