ஆப்கானிஸ்தானில் போர் என்பது ஒருபோதும் ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த செயலாக இருக்கக்கூடாது என்று அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடன், செப்டெம்பர் 11 க்குள் அனைத்து அமெரிக்க படையினரையும் ஆப்கானிலிருந்த திரும்பப் பெறுவதாகவும் கூறினார்.

புதன்கிழமையன்று வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையொன்றின்பேதே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனை தெரிவித்தார். 

உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அமெரிக்க படையினர் ஆப்கானில் தங்கியிருப்பதை இனி நியாயப்படுத்த முடியாது.

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பயங்கரமான தாக்குதலால் நாங்கள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றோம். இனியும் ஆப்கானிஸ்தானில் எங்கள் இராணுவ இருப்பை விரிவுபடுத்துவதற்கான அல்லது விரிவாக்கும் சுழற்சியைத் தொடர முடியாது.

நாங்கள் எங்கள் படையினரை திரும்பப் பெறுவது சிறந்த நிலைமைகளை உருவாக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

அமெரிக்க படையினரை திரும்பப் பெறும் செயல்முறை எதிர்வரும் மே 1 ஆம் திகதி தொடங்கும் என்றும் பைடன் கூறினார்.

நேட்டோ படையினர் மே 1 முதல் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவார்கள் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் புதன்கிழமை தெரிவித்தார். 

அமெரிக்க ஆதரவு மற்றும் தலைமையை நம்பியுள்ள சுமார் 7,000 அமெரிக்க அல்லாத நேட்டோ படைகள்  ஆப்கானில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.