ரஷ்யாவுக்கான அமெரிக்காவின் பலத்த அடி

Published By: Vishnu

15 Apr, 2021 | 07:39 AM
image

தேர்தல் தலையீடு மற்றும் சோலார் விண்ட்ஸ் ஹேக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜோ பைடன் நிர்வாகம், அரசாங்க மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 12 ரஷ்ய நபர்களுக்கு எதிராகவும், 20 நிறுவனங்களுக்கு எதிராகவும் பொருளாதாரத் தடைகளை விதிக்க விரும்புகிறது என்று புளூம்பேர்க் செய்திக்கான வெள்ளை மாளிகை நிருபர் புதன்கிழமை தெரிவித்தார்.

மேலும், 10 ரஷ்ய தூதர்களை வெளியேற்றவும் வொஷிங்டன் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த வாரம், ப்ளூம்பெர்க், சோலார் விண்ட்ஸ் இணைய மீறல் மற்றும் 2020 ஜனாதிபதித் தேர்தலில் தலையிடுவதில் ரஷ்யாவின் பங்கைப் பற்றி அமெரிக்க நிர்வாகம் உளவுத்துறை ஆய்வு ஒன்றை முடித்ததாக அறிவித்தது. 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் தேர்தல் குறுக்கீடு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைகள் உட்பட ரஷ்ய இராஜதந்திரிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் நடுப்பகுதியில், அமெரிக்க உளவுத்துறை ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது, 2020 தேர்தலின் போது அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடனை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், அமெரிக்காவில் அரசியல் பிளவுகளை அதிகரிக்கவும் ரஷ்ய அரசாங்கத்தின் "செல்வாக்கு நடவடிக்கைகளுக்கு" புட்டின் அங்கீகாரம் அளித்ததாகக் குற்றம் சாட்டினார். 

இந் நிலையில் ரஷ்யாவுக்கான புதிய தடைகளை அமெரிக்கா அடுத்தவாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ரஷ்யா பலமுறை மறுத்து வருவதுடன் அவை, ஆதாரமற்றவை என்றும் கூறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17