நாட்டில் நேற்றைய தினம் 117 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 95,737 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 99 பேர் பேலியகொட - மினுவாங்கொட கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். 

அதேநேரம் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த 18 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளனா 225 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் குணமடைந்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையும் 92,151 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 2,982 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 226 பேரும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளன. அதனால் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 604 ஆக பதிவாகியுள்ளது.