துருக்கியில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியின் கிழக்கு பகுதியில் மத்திய இபேக்யோலு மாவட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலைய தலைமையகம் மற்றும் குடியிருப்பை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டடுள்ளது.

குறித்த தாக்குதலை தொடர்ந்து ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்

இந்த தாக்குதலுக்கு இதுவரையிலும் எவ்வித அமைப்பு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.