தனித்தா ? இணைந்தா ? - இதுவரை தீர்மானம் இல்லை என்கிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

15 Apr, 2021 | 06:22 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் தினத்தை தனித்து நடத்துவதா அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்வதா என இதுவரை தீர்மானிக்கவில்லை என கட்சியின் உபதலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் மே தினத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து கொண்டாட தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படும் செய்திதொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை நாங்கள் கொண்டாடுவோம். மே தினத்துக்கு மிகவும் விசேடமான கட்சியாவது  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும். ஏனெனில் தொழிலாளர் தினத்தை அரச விடுமுறை தினமாக்கியது, தொழிலாளர்களுக்கு பாரியளவில் வரப்பிரசாதங்களை வழங்கியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகும். 

அத்துடன் எதிர்வரும் தொழிலாளர் தின பிரதான நிகழ்வை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவர்களுடன் தனித்து மேற்கொள்வதா அல்லது அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்வதா என இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. 

அதுதொடர்பாகவும் மாகாணசபை தேர்தல் மற்றும் தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பாகவும் அரசாங்கத்துடன் கலந்துரையாட இருக்கின்றோம். அதன் பின்னரே மே தினம் தொடர்பாக தீர்மானம் எடுப்போம்.

மேலும் மாகாணசபை முறைமைக்கு கட்சி என்றவகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கின்றோம். மாகாணசபைகள் மக்கள் பிரதிகளுடனே செயற்படுத்தப்படவேண்டும். மாகாண சபைகள் மூலம் மக்களுக்கு பாரிய சேவையை மேற்கொள்ள முடியுமாகின்றது. 

அதனால் தற்போதுள்ள மாகாணசபை முறைமைக்கு அப்பாற் சென்று மாவட்ட மத்தியில் அதிகார பரவலாக்கும் முறைமைக்கு நாங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20