( செ.தேன்மொழி)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர்  காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம - தொடம்கொட வீதியில் இன்று முற்பகல் 11 .45 மணியளவில் எட்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது வேனில் பயணித்த ஒருவர் மாத்திரம் சிறு காயமடைந்துள்ளதுடன்,வேறு எவருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கவில்லை. 

எனினும் அந்த பகுதியில் வாகன நெரிசல் காணப்பட்டது. அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு பொலிஸ் பிரிவினர் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.