முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினரால் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2010 முதல் 2014 வரை 5 வருடங்கள் தனது சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பில் அவருக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரியவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.