புதுவருடத்தை முன்னிட்டு இலங்கை வந்த இந்தியாவின் ஐ.என்.எஸ். ரன்விஜய் கப்பல் 

14 Apr, 2021 | 08:48 AM
image

 (செய்திப்பிரிவு)

ஐந்தாவது ராஜ்புத் வகை நாசகாரி ஐ.என்.எஸ்.ரன்விஜய் கப்பல் கடந்த திங்கட்கிழமை  கொழும்புக்கான நல்லெண்ணவிஜயம் ஒன்றைமேற்கொண்டு வந்துள்ளது.

இலங்கை - இந்தியா ஆகிய நட்புநாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினைவிருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்த கப்பலின் விஜயம் அமைகின்றது என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ச்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ச்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது ;

 புதுவருட கொண்டாட்டங்கள் நடைபெறும்தருணத்தில் இலங்கை மக்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான வாழ்த்துக்களுடன் கூட்டொருமைப்பாடு மற்றும் ஐக்கியம் ஆகிய செய்தியினையும் குறித்து நிற்பதாக குறித்த இந்திய கடற்படைக் கப்பலின் வருகைஅமைகின்றது.

இக்கப்பல் கப்டன் நாராயணன் ஹரிஹரனின் கட்டளையின் கீழியங்குவதுடன்  மேற்கு கடற்பிராந்திய கட்டளை தளபதி சுதர்ஷனவையும், கப்டன் நாராயணன் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் நாளை வியாழக்கிழமை இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்தூபியில் அவர் அஞ்சலி செலுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பினை பாரம்பரிய ரீதியாக பகிர்ந்துவருகின்றன.  

பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகளில் பரஸ்பரம் நன்மைதரும் வகையில் இரு கடற்படையினரும் ஒத்துழைப்பினை வழங்கி செயற்பட்டு வருகின்றனர். 

மிகவும் நெருங்கிய நட்புநாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினைவிருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்த கப்பலின் விஜயம் அமைகின்றது.

நீர் மூழ்கி எதிர்ப்பு வசதியினைக் கொண்டிருக்கும் இந்த ஏவுகணை எதிர்ப்புகப்பலானது சுதேசிய முறையில் சுயமாக தயாரிக்கப்பட்ட பிரமோஸ் சுப்பர் சொனிக் ஏவுகணை வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19