எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் சிறந்த முன்மாதிரியல்ல - திலும் அமுனுகமவின் கருத்திற்கு ஜேர்மன் தூதுவர் பதில்

14 Apr, 2021 | 07:01 AM
image

(எம்.மனோசித்ரா)

ஹிட்லர் ஆட்சி இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்ததை அவதானித்தேன். ஹிட்லர் என்பவர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் சிறந்த முன்மாதிரியல்ல என்று இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்கள் அவர் ஹில்டரைப் போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர் என்று இராஜாங்க  அமைச்சர் திலும் அமுனுகம கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் டுவிட்டர் பதிவொன்றை இட்டு ஜேர்மன் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'' ஹிட்லர் ஆட்சி இலங்கைக்கு நன்மை பயக்கும் என்று கூறுவதை நான் கேட்டேன். மில்லியன் கணக்கான உயிரிழப்புக்களுக்கும் , மனித கற்பனைக்கும் அப்பாற்பட்ட மனித துன்பங்களுக்கும் , விரக்திக்கும் ஹில்டர் தான் காரணம் என்பதை நினைவுபடுத்துகின்றேன். எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் சிறந்த முன்மாதிரியல்ல.'' என்று ஜேர்மன் தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04