வாசகர்களுக்கு தமிழ் - சிங்கள புதுவருட வாழ்த்துக்கள் ! 

14 Apr, 2021 | 07:22 AM
image

அனைத்து வாசகர்களுக்கும் வீரகேசரி இணையத்தளம் தமிழ் - சிங்கள புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

மிகவும் முக்கியமானதொரு அபாயத்தினை எதிர்நோக்கிய நிலையில் இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களைத்  எமது வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே இந்தப் புத்தாண்டினை சுகாதார ரீதியான எச்சரிக்கைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களுக்கு உட்பட்ட வகையிலேயே கொண்டாட வேண்டிய அவசியமுள்ளது.

பொதுமக்களின் சுகாதார நலனை கருத்திற்கொண்டு விதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் தடைகளை புத்தாண்டு நாட்களிலும் கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடுங்கள்.

எனவே இம்முறை புத்தாண்டினை எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் உங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் கொண்டாடுங்கள்.

உலக நாடுகளும் எமது நாடும் மக்களும் முகம்கொடுத்துள்ள இந்த நோய்த்தொற்று பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு உறுதியுடன் நாமனைவரும் கைகோர்த்து புத்தாண்டு பிரார்த்தனைகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்வோம்.

இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகின்றோம்.

இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவர வீரகேசரி இணையத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.

பிலவ வருடப்பிறப்பு

மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில் பிறக்கிறது.

விஷூ புண்ணிய காலம்

முன்னிரவு நாடி 38 விநாடி 51 (9.39 மணி) முதல் அன்று பின்னிரவு நாடி 58 விநாடி 51 (5.39 மணி) வரை விஷூ புண்ணிய காலமாகும்.

மருத்து நீர், ஆடை

இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி நீலம், சிவப்பு நிறமுள்ள பட்டாடை ஆயினும் நீலம், சிவப்பு கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.

உண்டிகள்

அறுசுவை உணவுடன் பொரிக்கறி, கசப்பு என்பவை சேர்த்தருந்த வேண்டும்.

தோஷ நட்சத்திரங்கள்

அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம், பூரம், உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம், பூராடம் இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ் செய்து இயன்ற தானதருமங்களைச் செய்து சங்கிரம தோஷத்தை நிவர்த்தி செய்யக்கடவர்.

கைவிசேஷம்

14.04.2021 காலை 09.09 - 09.52 வரை

14.04.2021 பிற்பகல் 2.22 - 4.11 வரை

16.04.2021 அதிகாலை 4.14 - 5.07 வரை

17.04.2021 காலை 07.40 - 09.00 வரை

17.04.2021 பிற்பகல் 03.04 - 03.59 வரை

 பலன்

மேடம் - நஷ்டம்

இடபம் - நஷ்டம்

மிதுனம் - சமசுகம்

கர்க்கடகம் - நஷ்டம்

சிங்கம் - பெருநஷ்டம்

கன்னி - சமசுகம்

துலாம் - நஷ்டம்

விருச்சிகம் - நஷ்டம்

தனு - அதிகலாபம்

மகரம் - சமசுகம்

கும்பம் - சமசுகம்

மீனம் - அதிகலாபம்

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38