உலக வங்கியிடம் இருந்து 1.3பில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது பாகிஸ்தான்

13 Apr, 2021 | 09:09 PM
image

“பாகிஸ்தான் 500 மில்லியன் டொலர்கள் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கிய பின்னர் அந்நாட்டின் வறண்ட நிதிக்கோடுகள் மீள ஆரம்பிக்கின்றன”

பாகிஸ்தானின் வரவு செலவுத்திட்டத்திற்கு 600 மில்லியன் டொலர்கள் உதவியளித்தல் உட்பட 1.3பில்லியன் டொலர்களை உலக வங்கியிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

திட்டமிடல் அமைச்சின் ஒரு திட்டமான 300க்கும் மேற்பட்ட ஆடம்பர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதில் பணம் வீணாகும் என்ற அச்சம் காரணமாக் அந்த அமைச்சின் எதிர்ப்பை எதிர்கொள்ளாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கு 200 மில்லியன் டொலர்கள் கடன் வழங்கப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் இந்த நோக்கத்திற்காக பணத்தை கடன் வாங்குவதற்கு பாகிஸ்தான் மறுத்தபோதும் அகதிகளுக்காக 50 மில்லியன் டொலர்கள் கடன் பெறுவதற்கு பாகிஸ்தான் இணக்கம் கண்டது.

இந்நிலையில் உலக வங்கியுடன் ஏழு கடன் ஒப்பந்தங்களின் போது பாகிஸ்தானுக்கனான உலக வங்கியின் இயக்குனர் நூர் அகமது மற்றும் நஜி பென்ஹாசின் ஆகியோர் மாகாண அரசாங்கங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் விழாவில் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் மக்தூம் குஸ்ரோ பக்தியார் கலந்து கொண்டு சாட்சியம் அளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தால் 500 மில்லியன் டொலர்கள் தவணைக்கடன் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டின் வறண்ட நிதி வரிகள் மீண்டும் ஆரம்பமாகத் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தான் 2பில்லியன் டொலர்களை அடுத்தவாரம் குறிப்பிட்டு முன்மொழியப்படாத பிணைகளை அடுத்தவாரம் சர்வதேச சந்தையில் குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து கடனாகப் பெறவுள்ளது.

பாகிஸ்தானின் மொத்த பொதுக்கடன் பொருளாதாரத்தின் அளவின் 90சதவீதத்திற்கு அண்மித்ததாக உள்ளது. இந்த சதவீதமானது பாகிஸ்தான் பாராளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட சட்டரீதியான கடன் வரம்பை விடவும் மேலானதாக உள்ளது.

அத்துடன் அக்கடனில் 1.34 பில்லியன் டொலர்கள் நிதியுதவி சமூக பாதுகாப்பு, பேரழிவு மற்றும் காலநிலை இடர் மேலாண்மை, பின்னடைவுரூபவ் வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு, மனித மூலதன மேம்பாடு மற்றும் ஆளுமை ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் முன்முயற்சிகளை ஆதரிக்கும் என்று பாகிஸ்தானின் பொருளாதார விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வளர்ந்து வரும் கடன் பெறுமானமானது, “தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தங்கள்ரூபவ் சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் மேம்பாட்டு பங்காளிகளின் நம்பிக்கை” ஆகியவற்றின் அடையாளமாக இருப்பதாக அமைச்சர் பக்தியார் குறிப்பிட்டார்.

‘பெனாசீர்’ வருமான உதவித் திட்ட பயனாளிகளிடையே பணத்தை வழங்குவதற்காக இரு தரப்பினரும் 600 மில்லியன் டொலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அத்தோடுரூபவ் நாட்டின் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களிடையே எதிர்கால நெருக்கடிகள் மற்றும் பின்னடைவுகளுக்கு பங்களித்தல், தகவலமைப்பு சமூக பாதுகாப்பு ஆகியவற்றின் வளர்ச்சியை இந்த திட்டம் ஆதரிக்கும் என்றும் அமைச்சு மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

600 மில்லியன் டொலர்கள் கடனானது ஈஹாஸ் நிபந்தனை பணப்பரிமாற்ற (சி.சி.டி) திட்டங்களுக்காக பெறப்பட்டுள்ளது. அதாவது கஃபாலத்ரூபவ் வசீலா-இ-தலீம், நநெஷினுமா,வ் எஹ்சாஸின் நிதி சேர்க்கை, முறைசாரா தொழிலாளர் ஆதரவு, முயற்சிகள் ஆகியனவும் இந்தத் திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழுவானது 600 மில்லியன் டொலர்கள் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில், பாகிஸ்தான் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன, குறிப்பாக முறைசாரா துறையில் பணிபுரிபவர்கள், சேமிப்பு இல்லாதவர்கள் அல்லது இருக்கும் சமூக பாதுகாப்பு நிகர திட்டங்களால் பாதுகாக்கப்படுவதில்லை என்று அமைச்சர் பென்ஹாசின் கூறினார்.

முறைசாரா தொழிலாளர்களில் குறிப்பாக பெண்கள் சார்ந்து இருக்கக்கூடிய தொழில்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அதிக சேமிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் சமூக உதவியை ஏற்படுத்த முடியும். அத்தோடு ஒரு புதுமையானரூபவ் கலப்பின அணுகுமுறையின் மூலம் முறைசாரா தொழிலாளர்களை சிறந்த முறையில் சென்றடைய எசாஸ் சமூக பாதுகாப்பு திட்டங்களை படிப்படியாக விரிவுபடுத்துவதற்கு நெருக்கடி, நெகிழ்திறன் உடைய சமூக பாதுகாப்பு திட்டம் உதவிகளை வழங்கவுள்ளது. அதேநேரம் புறச்சூழலில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டால். பொருளாதார நெருக்கடியின் போது மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் விரைவாக பதிலளிக்கக்கூடிய ஒரு தளத்தை இந்தக் கடன்தொகை வழங்குகின்றது.

ஒரு நெருக்கடி ஏற்பட்டால் மிகவும் நெகிழ்வான மற்றும் ஆற்றல்மிக்க சமூக பாதுகாப்பு அமைப்பு மக்களின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்கு தேவையான நேரத்தை கணிசமாகக் குறைப்பதாக உள்ளது.

பாகிஸ்தானும் உலக வங்கியும் 200 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள வெட்டுக்கிளி பாதிப்பு மற்றும் அவசர, உணவு பாதுகாப்பு திட்டத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் வெட்டுக்கிளிகளை எதிர்த்துப் போராட பாகிஸ்தான் உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர்களை கடனாக எடுக்கும் பாகிஸ்தான் பூச்சிகளை எதிர்த்துப் போராடுவதோடு நேரடியாக தொடர்புபடுத்தாத விடயங்களில் அத்தொகையின் அரைப்பகுதிக்கும் மேற்பட்ட தொகை நுகரப்பட்டுவிடுவதாக உள்ளது.

கடன் பணத்தில், 310 இரட்டை கபின் வாகனங்கள், 200 மடிக்கணினிகள் வாங்கவும் விவசாயிகளுக்கு உதவுவதை விட சுமார் 322 பதவிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படுத்துவதற்கு திட்டமொன்று உள்ளது. இந்த வாகனங்கள் ஒரு பிரிவுக்கு 7.5 மில்லியன்; ரூபாவை உடைய (பாகிஸ்தான் ரூபா) அதிகவிலை கொண்ட சொகுசு வாகனங்களாக கருதப்படுகின்றன.

பாகிஸ்தானின் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பிறகு, இவ்வாறான கடன் நிதிகளைப் பயன்படுத்தும் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் வெட்டுக்கிளித் திட்டத்தை திட்ட ‘கைபர்- பக்துன்க்வா’ மனித மூலதன முதலீட்டு திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர்கள் பெறும் கடன் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டது.

கே-பி இன் நான்கு மாவட்டங்களில் அகதிகளுக்கு அதாவது பெஷாவர், நவ்ஷெரா, ஹரிபூர் மற்றும் ஸ்வாபி ஆகிய பிரதேசங்களில் கிடைக்கும் ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் ஆரம்பக் கல்வி சேவைகள் ஆகியன கிடைக்கும் தன்மை, பயன்பாடு மற்றும் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

‘சிந்து’ பின்னடைவு திட்டத்திற்காக 200 மில்லியன் டொலர்கள் மற்றொரு கடனாக பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், பலூசிஸ்தான் வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவோர் மற்றும் பலூசிஸ்தான் மனித மூலதன முதலீட்டு திட்டத்திற்காக, 86 மில்லியன் டொலர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த திட்டங்கள் கிராமப்புற சமூகங்களுக்கு வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

பலூசிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களில் நிறுவனங்களின் நிலைத்தன்மையை அடைதல் மற்றும் தரமான சுகாதார மற்றும் கல்வி சேவைகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. அதேநேரம் பலூசிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களில் நிறுவனங்கள் பல நிலைத்தன்மையை அடைதல் மற்றும் தரமான சுகாதார மற்றும் கல்வி சேவைகளின் பயன்பாட்டை மேம்படுத்துதல்ரூபவ் அகதிகளை நிர்வகிப்பதற்கான நிறுவன தலையீடுகளை ஆதரிப்பதற்காக, பாகிஸ்தான் மற்றும் உலக வங்கி 50 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பாகிஸ்தான் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்ட உலக வங்கியால் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-த எக்பிரஸ் ரைபூனுக்காக ஷெஹாப்ஸ் ராணா-

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04