logo

அமைச்சர் லசந்த அழகியவண்ண மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் ! தேங்காய் எண்ணெய் குறித்து பீதியடைய வேண்டாம் ! 

13 Apr, 2021 | 03:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மனித பாவனைக்குதவாத தேங்காய் எண்ணெய் சந்தையில் இல்லை. அதனால் மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆராய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சந்தையில் விற்பனை செய்துவரும் தேங்காய் எண்ணெய்யில்  எப்லடொக்சின் இருக்கவேண்டிய அளவுக்கு அதிகம் இருக்கின்றதா என்ற பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

சுகாதார அமைச்சின் உணவுப்பாதுகாப்பு பிரிவின் தர கட்டளையின் பிரகாரம் பில்லியன்னுக்கு 30 அலகுகளுக்கு அதிகம் இருக்கக்கூடாது என்பதாகும். 

அதனால் சந்தையில் இருக்கும் தேங்காய் எண்ணெய்யில் 30 அலகுகளைவிட அதிகம் எப்லடொக்சின் இருக்கின்றதா என்பது தொடர்பாக இலங்கை சுங்கம் மற்றும் குற்றப்புலனாய் பிரிவு தற்போது பரிசோதனை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் இதற்கு முன்னர் சந்தையில் விற்பனையில் இருக்கும் தேங்காய் எண்ணெய் 125 மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைக்காக தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி இருந்தோம். 

அதில் 109 மாதிரிகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த 109 மாதிரிகளிலும் சுகாதார அமைச்சினால் எமக்கு வழங்கப்பட்டிருக்கும் வழிகாட்டலின் பிரகாரம் 30 அலகுகளுக்கு குறைவாகவே அவற்றில் எப்லடொக்சின் அடங்கி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதனால் தேங்காய் எண்ணெய் பரிசோதிக்கும் நடவடிக்கையை நுகர்வோர் அதிகாரசபையினால் தொடந்தும் மேற்கொண்டு வருகின்றோம். 

 நுகர்வோருக்கு விற்பனை செய்யும் சந்தைகளில் எப்லடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் இருக்கின்றதா என்ற பரிசோதனையையும் நாங்கள் மிகவும் பொறுப்புடன் மேற்கொண்டு வருகின்றோம். 

எனவே சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மனித பாவனைக்கு உகந்ததா இல்லையா என்ற தேவையற்ற பீதியை மக்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43
news-image

33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

2023-06-10 12:37:55
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது-இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் குரலை...

2023-06-10 11:12:06
news-image

சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கடத்த முற்பட்ட...

2023-06-10 10:34:24
news-image

நீதியரசர் நவாஸ் ஆணைக்குழு அறிக்கையில் நீதி...

2023-06-10 09:46:03