அதிரடி அறிவிப்பை வெளியிடவுள்ளார் ஹரீன் ; அரசாங்கத்திற்கும் சவால் விடுத்தார் !

13 Apr, 2021 | 11:19 AM
image

 (எம்.மனோசித்ரா)

ரஞ்சன் ராமநாயக்கவிற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளார். தனது முடிவினை மே மாதம் முதல் வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ மேலும்  தெரிவித்துள்ளதாவது :

ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா என்று பாராளுமன்ற உறுப்பினரொருவர் வெள்ளியன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். 

இவர்கள் சிறையிலடைப்போரை என்னால் எவ்வாறு பாதுகாக்க முடியும் ? எனினும் ரஞ்சன் ராமநாயக்கவிற்காக நான் மிக முக்கியமானதொரு அரசியல் முடிவொன்றை எடுக்கவுள்ளேன். எனினும் அரசாங்கத்தால் அந்த சவாலை பொறுப்பேற்க முடியுமா ?

எனது அரசியல் ரீதியான தீர்வு என்ன என்பதை நான் இப்போது அறிவிக்கப் போவதில்லை. எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் நான் எனது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன். 

முடியுமானால் எனது தீர்மானத்திற்கு முகங்கொடுக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன். எனது தீர்மானத்தின் மூலம் நான் யார் என்பதை மீண்டும் இந்நாட்டு மக்களுக்கு நிரூபிப்பேன்.

ரஞ்சன் ராமநாயக்க என்ன தவறு செய்தார் ? கொலையுடன் தொடர்புடையவர்கள் பாராளுமன்றத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ரஞ்சன் ராமநாயக்கவை பார்ப்பதற்கு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட அனுமதி வழங்கப்படுவதில்லை. இதில் முழுமையாக அரசியல் நோக்கமே காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10