மூத்த நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மூத்த நகைச்சுவை நடிகரும், அண்மையில்  இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடித்த செந்திலுக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய மனைவி, மகள் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

இவர்கள் சிகிச்சைக்காக சென்னையின் புறநகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நடிகர் செந்தில், அண்மையில் பா.ஜ.க. கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதும், இதன் காரணமாகவே அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.