ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்ள மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இன்று (18) ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்துக்கொள்வார் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.