நகர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பசறை நகரில் இன்று காலை 12-4-2021 இடம்பெற்றுள்ளது.
பசறை பஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்ளை அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர், தன்னிடமிருந்த கத்தியை எடுத்து, பொலிஸ் கான்ஸ்டபிள்ளை தாக்கியுள்ளார்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாக, பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்.
குறித்த தாக்குதலை மேற்கொண்ட அங்காடி வியாபாரி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பசறையில் பொது மக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் இடையூறுகளை, மேற்படி வியாபாரி மேற்கொண்டிருந்ததினால், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், அந்த வியாபாரியை எச்சரித்தார்.
இதையடுத்து, ஆத்திரம் கொண்ட அங்காடி வியாபாரி, பொலிஸ் கான்ஸ்டபிள்ளை கத்தியால் தாக்கியுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM