குடந்தையான்

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பாக வீசி வந்த ‘தேர்தல் அரசியல் புயல்’ ஏப்ரல் 6 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைதியான வாக்குப்பதிவுடன் நிறைவடைந்திருக்கிறது. 

மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை அறிந்து கொள்ளும் ஆவலில் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியின் தலைவர்களும், அக்கட்சியின் தொண்டர்களும் காத்திருக்கிறார்கள். வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கின்றது.

நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணிகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தல் என்று மக்களும்,வாக்காளர்களும் ஒப்புக்கொண்டாலும், உண்மையில் இந்த இரண்டு திராவிட கட்சிகளின் வெற்றிக்காக பின்னணியில் கடுமையாக உழைத்த இரண்டு தனியார் ஊடக நிறுவனங்களின் இடையேயான போட்டியாக தான் இந்த தேர்தல் அமைந்தது. இந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் தேர்தல் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குகிறேன் என்ற பெயரில் தமிழக மக்களிடையே ஒரு கட்சி சார்ந்த அரசியல் வெறுப்புணர்வை விளம்பரங்களின் மூலம் விதைத்திருக்கிறார்கள். 

நடைபெற்று முடிவடைந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்தை பொறுத்தவரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் இருபதாயிரம் கிலோமீற்றர் தொலைவிற்கு சுற்றுப்பயணம் செய்து 250 இடங்களில் மக்களுடன் உரையாடி, அ.தி.மு.க. கூட்டணிக்காக தன்னந்தனியாக வாக்கு சேகரித்தார். தி.மு.க. தலைவரான ஸ்டாலின், 12 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் செய்து,70க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களுடன் உரையாடி, தி.மு.க. கூட்டணிக்காக வாக்கு சேகரித்தார். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-11#page-11

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.