எம்.காசிநாதன்

‘கொரோனா தொற்று பரவல்அதிகரிக்கிறது’ என்ற இடைவிடாத அச்சுறுத்தல் ஒருபுறம். வாக்காளர்களுக்கு ‘பணவிநியோகம்’ என்ற புகார்கள் இன்னொரு புறம்.‘ஒரு சின்னத்திற்கு வாக்களித்தால் இன்னொரு சின்னத்திற்கு பதிவாகிறது” என்ற பரபரப்புப் புகார் மற்றொரு புறம். அனைத்தையும் மீறி,கோடைவெயிலின் தாக்குதலையும் தாண்டி, தமிழகவாக்காளர்கள் 72 சதவீதத்திற்கு மேல் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று வாக்களித்துள்ளார்கள். 

234 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்றுள்ள தேர்தலின் முடிவுகள் மே 2 ஆம் திகதி எண்ணப்படும் போது, தமிழகத்தில் ஆட்சியில் அமரப்போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும். வாக்குப்பதிவிற்கு முன்பு வரை வெளிவந்த கருத்துக் கணிப்புகள் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு என்று கூறியிருந்தன.    

அந்த கள நிலவரத்தில் வாக்குப் பதிவுக்கு முன்பு வாக்காளர்கள் மத்தியில் பெய்த‘கன பண மழை’ இந்தகருத்துக் கணிப்புகளை மாற்றியமைக்குமா அல்லது பண விநியோகத்தின் ஆளுகைக்கு உட்படாமல் வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்துள்ளார்களா?என்றகேள்விகளுக்குப் பதில்தெரிந்து விடும்.    

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இந்த முறைபெரிய அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏதுமின்றி முடிந்து விட்டது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விடையே ‘தனிப்பட்ட தாக்குதல்கள்’  பிரசாரத்தில் தொடர்ந்தாலும் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் முதல் சுற்றில் ராகுல் பிரசாரத்துடன் மூட்டை கட்டிவைக்கப்பட்டது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-11#page-10

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.