கார்வண்ணன்

“தற்போதைய ஆளும் கட்சியின் கடந்த ஆட்சிக் காலத்து சம்பவங்களைத் தோண்டித் துருவி ஆராயத் தொடங்கினால், காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்களோ இல்லையோ, காணாமல் ஆக்கியவர்கள் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்”

அரசாங்கத்தின் அடுத்த குறி காணாமல் போனோருக்கான பணியகம் போலவே தெரிகிறது, அரசாங்கப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் வெளியிட்டுள்ள கருத்தில் இருந்தே அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.

காணாமல் போனவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதை அரசாங்கம் எதிர்க்கவில்லை என்றும், ஆனால், காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

எதிர்காலத்தில் அதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

ஜனநாயக சமூகத்தில் காணாமல் போதல்கள் இடம்பெறுவதில்லை என்றும், இலங்கையில் தற்போது காணாமல் ஆக்கப்படுதல் இல்லாத சூழலில் இவ்வாறான பணியகம் தேவையற்ற ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

காணாமல்போனோர் பணியகம் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படை நோக்கங்களை புரிந்து கொள்ளாமலேயே, அமைச்சர் ரம்புக்வெல்ல இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று யாரும் எண்ணி விடலாகாது.

காணாமல் போனோருக்கான பணியகம் உருவாக்கப்பட்ட போது, அதனை தற்போதைய ஆளும்கட்சி விரும்பவில்லை. அதனைக் கடுமையாக எதிர்த்திருந்தது.

அதற்குக் காரணம், காணாமல் ஆக்கப்பட்ட பெருமளவு சம்பவங்கள் இடம்பெற்றது, தற்போதைய ஆளும் கட்சியின் காலத்தில் தான். 

அந்தக் காலத்து சம்பவங்களைத் தோண்டித் துருவி ஆராயத் தொடங்கினால், காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்களோ இல்லையோ, காணாமல் ஆக்கியவர்கள் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.

அதனால் தான், காணாமல் போனோருக்கான பணியகம் என ஒன்று உருவாக்கப்பட்டதையும் அவர்கள் விரும்பவில்லை. இப்போது இருப்பதையும் விரும்பவில்லை.

காணாமல் போனோர் பணியகமானது, நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளில் ஒன்று.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-11#page-10

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.