சுபத்ரா

இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு ஆலோசகரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை, வலுவடைந்து வருகிறது.

இந்தக் கோரிக்கை கடந்த பல மாதங்களாகவே பிரித்தானிய அரசின் உயர்மட்டத்தை நோக்கி முன்வைக்கப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னர், இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்கான இயக்கத்தினால், ஒரு இணையவழி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்து, பிரித்தானிய அரசு தமது இராணுவ ஆலோசகரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோருகின்ற விண்ணப்பம் அது.

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையர்கள், தாம் வசிக்கின்ற பாராளுமன்றத் தொகுதி உறுப்பினருக்கு இந்த விண்ணப்பத்தை அனுப்பும் வகையில் அந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

அந்த முயற்சி வெற்றியளித்திருக்கிறது என்பதை, கடந்த மாதம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின் போது உணர முடிந்தது.

அந்த விவாதத்தில் உரையாற்றிய 20 பாராளுமன்ற உறுப்பினர்களில், 5 பேர்,  இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்பு ஈடுபாடுகளை பிரித்தானியா மீளாய்வு செய்ய வேண்டும் என்றும், கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரக பாதுகாப்பு ஆலாசகரை வெளியேற்ற வேண்டும் என்றும், கோரியிருந்தனர்.

இந்தக் கோரிக்கை பிரித்தானிய அரசினால் கவனத்தில் கொள்ளப்படும் வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது, அவ்வாறு கொழும்பில் இருந்து பிரித்தானியா தனது பாதுகாப்பு ஆலோசகரை விலக்கிக் கொள்ளுமானால், இலங்கைக்கு அது பெரும் இழப்பாகவே இருக்கும்.

ஏனென்றால், இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-11#page-9

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.