அமசோன்  (Amazon)  உயர் கல்வி நிறுவனத்தின 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவின் பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சர் கெளரவ.சுசில் பிரேமஜயந்த - கல்வி சீர்திருத்தம், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைகற்கை நெறிகள், கௌரவ விருந்தினர்களாக மாலைதீவு உயர்ஸ்தானிகர் அதி கெளரவ.ஒமர் அப்துல் ரசாக், மாலைதீவு பிரதி உயர்ஸ்தானிகர் அஸ்லம் ஸகீர் (Shakir) , பேராசிரியர்.சந்திரசேகரன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அமசொன் கல்லூரி மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் டிப்ளோமா, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் கற்கை நெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 120 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.