logo

சீரழிக்கப்படும் பொருளாதாரம்

Published By: Digital Desk 2

12 Apr, 2021 | 02:52 PM
image

என்.கண்ணன்

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருள் அடங்கியுள்ளதாக வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள், பாம் எண்ணெய் இறக்குமதிக்கும் விற்பனைக்கும் அரசாங்கம் தடை விதித்திருக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான உத்தரவை பிறப்பித்துப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

எதற்காக பாம் எண்ணெய் இறக்குமதியை தடுப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதற்கான காரணத்தை அரசாங்கம் இன்னமும் வெளியிடவில்லை.

ஆயினும், உள்ளூர்  தேங்காய் எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிப்பதை ஒரு காரணமாக அரசாங்கம் முன்வைக்கக்கூடும்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் உழுந்து, மஞ்சள், சோளம் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது.

உள்நாட்டு உற்பத்தியைஅதிகரிப்பதற்காகவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியது.

இதையடுத்து குறித்த பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ள போதும், வழமையான தேவையை ஈடு செய்யும் அளவுக்கு உற்பத்தி இடம்பெறவில்லை.

இதனால், சந்தையில் அதிக விலைகொடுத்தே, இந்தப் பொருட்களை வாங்க வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

நான்கு மடங்காக அதிகரித்த உழுந்து விலை, இரண்டு மடங்காக குறைந்திருக்கிறதே தவிர, இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

மஞ்சள் போன்றவற்றின் நிலையும் அவ்வாறே உள்ளது.

நாட்டு மக்களை, அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கப் பழக்கப்படுத்தியிருக்கிறது அரசாங்கம்.

தானிய வகைகளை இரண்டு மூன்று மடங்கு விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

நுகர்வோர் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பை குறைப்பதற்கான வழிகளைத் கண்டறியாமலேயே, அரசாங்கம் பொருளாதாரம் தொடர்பான குழப்பமானதும் நுகர்வோரை திணற வைக்கக் கூடியதாகவும், முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது.

அவ்வாறான ஒரு முடிவு தான், பாம் எண்ணெய் விவகாரத்திலும் எடுக்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டில் பாம் எண்ணெய் உற்பத்திக்கான பனை மரங்களை பயிரிடுவதற்கு அரசாங்கம் தடைவிதித்திருக்கிறது. கட்டம் கட்டமாக அவற்றை அழித்து இறப்பர் மரங்களை பயிரிடுமாறு கூறியிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-11#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் உலக அறிவிப்பாளர் அல்ல ! ...

2023-06-09 10:34:12
news-image

1978 இல் தங்கம் கடத்தி விமான...

2023-06-06 09:53:32
news-image

மதத்தை மகுடியாக பயன்படுத்தும் அரசியல் :...

2023-06-05 15:32:02
news-image

சேறு குளித்த விக்னேஸ்வரன்

2023-06-05 14:26:13
news-image

போர்க்குற்ற ஆதாரங்களை அழித்தல் அசிரத்தையா, அரசியலா?

2023-06-05 14:34:34
news-image

‘பீச் கிராப்ட்’ கொடையின் பின்னணி

2023-06-05 12:40:30
news-image

வருகிறதா இன்னொரு நெருக்கடி?

2023-06-05 12:25:12
news-image

நிராகரிக்கப்பட்ட அரசியலில் தப்பிப் பிழைத்தல்

2023-06-06 09:56:35
news-image

தனிமனிதன் கூட அடக்குமுறை அமைப்பை எதிர்கொள்ள...

2023-06-05 11:57:39
news-image

ஊடக சுதந்திரங்களை ஒடுக்கும் பாதையில் செல்லக்கூடாது

2023-06-05 09:54:55
news-image

தேசமாக முன்னேற நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி...

2023-06-05 12:07:29
news-image

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு சாவுமணி அடிக்கவே...

2023-06-04 18:17:23