(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ். பி திஸாநாயக்க, டிலான் பெரேரா, மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கு புத்தாண்டுக்கு பிறகு அமைச்சரவை அமைச்சு பதவி அல்லது இராஜாங்க அமைச்சு பதவிகளை  வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளுக்கும்  இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில்  இவ்வாறு   அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளமை கவனிக்கத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரோ, எஸ். பி .திஸாநாயக்க மற்றும் அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி  அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டார்கள். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 52 நாள் இடைக்கால அரசாங்கத்தில் இவர்களுக்கு    அமைச்சவை மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.