“போர்வீரர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதில் இருந்தும், ராஜபக்ஷவினரை மின்சாரக் கதிரையில் இருந்தும் காப்பாற்றியதாக உரிமை கோருபவர்கள், சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பற்றிப் போதிக்கின்ற தகைமையைக் கொண்டவர்களாக இருக்க முடியுமா?”
தனக்குத் தனக்கு என்றால் சுளகுபடக்குப் படக்கு என்று அடித்துக் கொள்ளுமாம், அதுபோலத் தான் இலங்கையின்அரசியல்வாதிகளும், நடந்து கொள்கிறார்கள்.
அண்மையில் முன்னாள் வெளிவிவகார மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளிப்படுத்திய கருத்துக்களும், ஐக்கியதேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதமும் இதனைத் தான் உறுதிப்படுத்துவனவாக உள்ளன.
யுனெஸ்கோவின் தேசிய கலாசார மற்றும் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்பட்ட சிங்கராஜ வனத்தைப் பாதுகாப்பதற்கு ஐ.நாவைத் தலையீடு செய்யுமாறு கோரி, ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குட்டரஸுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் ருவன் விஜேவர்த்தன.
இலங்கையில் இன்று காடுகள்அழிக்கப்படுவது மிக முக்கியமான அரசியல் பிரச்சினையாக மாறியிருக்கிறது.குறிப்பாக சிங்கராஜவனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதுடன், காடுகளைஅழிப்பதில் அரசாங்கத்துக்கு இருக்கும் தொடர்புகளை முன்னிறுத்தி போராட்டங்களையும்முன்னெடுக்கின்றன.
காடழிப்பில் அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி தயாராக இல்லை. அவர் அண்மையில் போகஸ்வெவவுக்குச் சென்றிருந்த போது தமது அரசாங்கத்தின் மீது,காடழிப்பு தொடர்பாக வீண்பழி சுமத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இவ்வாறான நிலையில் தான், சிங்கராஜவனத்தை பாதுகாக்க ஐ.நா. தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ருவன்விஜேவர்த்தனவினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-11#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM