(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாணம் குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று யாழ் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கட்டமொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது அங்கு சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்ட விரோதமாக மதுபானத்தை உற்பத்தி செய்து , அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டதைப் போன்ற முத்திரை பதித்து இவற்றை விநியோகிக்க முயற்சித்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

இதன்போது சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 750 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட 42 மதுபான போத்தல்களும் , 180 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட 262 மதுபான போத்தல்களும் , 3000 லீற்றர் சட்ட விரோத மதுபானம் மற்றும் போலியான அரச அனுமதி முத்திரை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் 48 வயதுடைய மல்லாகம் பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் யாழ் குற்ற விசாரணைன் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.