இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை சுதந்திர பாணி (ஃ பிரீ ஸ்டைல்) பிரிவில் நடந்த ரெபிசாஜ் சுற்றில், இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் வெண்கல பதக்கப் போட்டிக்கு தகுதி பெற்ற சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவாவுடன் மோதினார்.
மிகவும் பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் 0-5 என பின் தங்கியிருந்த சாக்ஷி பிறகு ஆக்ரோஷமாக செயல்பட்டு முன்னிலை பெற்றார்.
இறுதியில் 8-5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற சாக்ஷி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.
வெண்கலப் பதக்கம் வென்றுள்ள ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாக்ஷி மாலிக்குக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் புகழுரைகளும் குவிந்த வண்ணமுள்ளன.
ரியோ ஒலிம்பிக் 2016 இல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர், யோகேஷ்வர் தத் மற்றும் சுஷில் குமார் ஆகியோர் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்றவர்களாவர்.
2002 இல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்ஷி கிளாஸ்கோ கொமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.
டோஹாவில் 2014 இல் இடம்பெற்ற ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், சாக்ஷி மாலிக்கின் சாதனையை பாராட்டியுள்மை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM