பணிப்புறக்கணிப்பில்  ஈடுபட்டால்  புகையிரத ஊழியர்களுக்கு  எதிராக கடும் நடவடிக்கை

12 Apr, 2021 | 10:17 AM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும் புகையிரத தொழிற்சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஒரு சில தொழிற்சங்கத்தினரது பின்னணியில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு காணப்படுகிறது. 

குறுகிய நோக்கத்திற்காக பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுளை புகையிரத தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

புகையிரத சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வாக்குறுதிகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.

 தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் பல்வேறு மட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புகையிரத சேவையில் காணப்படும்   தொழில் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக்க நேரிடும்.

புகையிரத சாரதிகள் சங்கம், புகையிரத கட்டுப்பாட்டு சங்கம் ஆகிய  தொழிற்சங்கத்தினர் கடந்த சனிக்கிழமை முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10