மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சோதனையின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 925 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவுக்கு அமைவாகவே நேற்று காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றவியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 40 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 306 பேரும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 518 பேருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

இந் நிலையில் கைதான நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.