நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரழந்தவர்களில் 6 பேர் நேற்று பதிவான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர். ஏனையோர் அதற்கு முன்னர் பதிவான விபத்துக்களில் சிக்குண்டவர்கள் ஆவர்.

ஜனவரி 01 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வீதி விபத்துக்களில் 580 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

பண்டிகை காலத்தினை கருத்திற் கொண்டு போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் சாரதிகளும் பயணிகளும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.