சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக இளைஞர்களை ஊக்குவிக்கும் Active Citizens செயற்றிட்டமானது British Council மற்றும் Muslim Aid அனுசரணையில் முன்னெடுக்கப்படுகிறது. 

இதன் ஒரு அங்கமாக  "இலத்திரனியல் வலையமைப்பு ஊடாக கழிவு முகாமைத்துவ பிரச்சனைகளை வெளிக்கொணர்தல் " எனும் கருப்பொருளில் உருவான  waste patrol செயற்றிட்டத்தினூடாக webner அமர்வு ஒன்று கடந்த மார்ச்  27 இல் இடம்பெற்றது. 

இதில் தெற்க்காசியாவின் பிரபல துறைசார் வல்லுனர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். 

தெற்காசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து  117 பங்கேற்ப்பாளர்கள் ,10 தன்னார்வலர்கள் , 3 செயற்றிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

அத்துடன் பங்கேற்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக ஒன்லைன் கருத்துக்கணிப்பு, பகுதியும் வெற்றிகரமாக முழுமையானது. 

waste patrol செயற்றிட்டத்தின் எதிர்பார்ப்பானது இலங்கையை பாதுகாப்பான கழிவகற்றல் முகாமைத்துவமுள்ள நாடாக ஆசியாவில் அறிமுகப்படுத்துவதாகும்.