ஜா-எல, நவந்தம பகுதியில் 13 கிலோ கிராம் ஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நான்கு ஆண்களும், இரண்டு பெண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் 24 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் முன்னெடுக்கவுள்ளனர்.