கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளை ஏப்ரல் 09, வெள்ளிக்கிழமை அன்று வெளிவிவகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பானது கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இதன்போது அமைச்சர் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கினார்.
அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறை, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் நல்லிணக்க வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்ட பல செயற்பாடுகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அவர் தூதுவர்களுக்கு வழங்கினார்.
ஊடாடும் வகையில் அமைந்த இந்த சந்திப்பானது, வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய - இலங்கை ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல், ஜனவரி 2021 இல் இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 23வது கூட்டத்தைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் துணைக் குழுக்களைக் கூட்டுவதற்கான திட்டங்கள் ஆகியன சார்ந்த கலந்துரையாடல்களை உள்ளடக்கியிருந்தது. கோவிட்-19 / கோவிட்டுக்குப் பிந்தைய சூழலில் இலங்கையில் சுற்றுலாவை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான இலங்கை சுகாதார நெறிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிரான்சின் தூதுவர் எரிக் லவெர்டு, இத்தாலியின் தூதுவர் ரீட்டா மன்னெல்லா, ருமேனியத் தூதுவரின் தூதரகப் பொறுப்பாளர் விக்டர் சியுஜ்தியா மற்றும் ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதரகத் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இதேவேளை வெளிவிகாரஅமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸையும் ஏப்ரல் 09 ஆம் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு சாதகமான முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
அபிவிருத்தி உதவி உட்பட இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். காலநிலை மாற்றம், பசுமை ஆற்றல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியன அமெரிக்காவினால் வழங்கப்படும் ஆதரவுக்கான முன்னுரிமைப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM