Gestetner இடமிருந்து Ricoh Smart Panel தொழில்நுட்பம் அறிமுகம்

Published By: Priyatharshan

19 Aug, 2016 | 10:00 AM
image

முன்னணி காகிதாதிகள் தீர்வுகளை வழங்கும் Gestetner  ஒஃவ் சிலோன் பிஎல்சி, இலங்கையில் இரு நவீன ஸ்மார்ட் செயற்திறன் வாய்ந்த போட்டோப்பிரதி இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

உலகின் முன்னணி பல்செயற்திறன் வாய்ந்த அச்சுப்பிரதி இயந்திரங்களை (MFPs) உற்பத்தி செய்யும் Ricoh வினால் இந்த இரு இயந்திரங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

2016 பெப்ரவரி மாதம் சர்வதேச ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த Smart Operation Panel (SOP) போட்டோபிரதி இயந்திரங்கள் இலங்கையில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

Ricoh வின் புகழ்பெற்ற பல்செயற்திறன் வாய்ந்த அச்சுப்பிரதி இயந்திரங்களை (MFPs) களின் புதிய உள்ளடக்கமாக அமைந்துள்ளதுடன் அடக்கமான அளவிலும் உயர் திறன் கொண்ட MP 305+SPF கறுப்பு மற்றும் வெள்ளை ஸ்மார்ட் மாதிரியாகவும் அமைந்துள்ளது.

ஒவ்வொரு Ricoh வின் பிரின்டர்களும் இரண்டாம் தலைமுறை 10.1 அங்குல Smart Operation Panel களையும் கொண்டுள்ளதுடன் Intel Processor களை கொண்டுள்ளதுடன் உற்பத்தித்திறனை அதிகரித்து, உயர் வினைத்திறன் மற்றும் உள்தூண்டுதலுடன் இலகுவாக பயன்படுத்தக்கூடிய தொடுகை அலங்கார கட்டமைப்பையும் கொண்டுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வு, ஹில்டன் கொழும்பு ஹோட்டலில் நடைபெற்றது. இதில் Ricoh ஆசியா பசுபிக் பிரைவட் லிமிட்டெட் வணிக செயற்பாடுகள் பிரிவின் பொது முகாமையாளர் யசுஷி டகஹாஷி மற்றும் வணிக செயற்பாடுகள் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் அவித் முகர்ஜி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சர்வதேச சந்தையில் தற்போது காணப்படும் ஒரே மாபெரும் இயந்திரம், Ricoh வின் வடிவமைப்பு கட்டமைப்பில் இயங்குவதுடன் அன்ட்ரொயிட் மற்றும் iOS மொபைல் சாதனங்களிலும் இயங்கும் திறன் கொண்டது. 

இது ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களில் இயங்கும் திறன் கொண்டது. இதில் இன்டர்நெட் பிரவுசர்கள் மற்றும் உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடைய சாதனங்களும் அடங்கியுள்ளன. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் இணைப்புத்திறனை கொண்டுள்ளது.

Ricoh வின் பரந்த வர்ண ஸ்மார்ட் தெரிவுகளில் MPC2004SP, MPC2504SP, MPC3004SP, MPC3504SP, MPC4504SP, MPC6004SP போன்றன அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்களவு வேகம், தர வெளிப்பாடு மற்றும் அதிகளவு தங்கியிருக்கும் திறன் ஆகியவற்றை வழங்குகின்றன.

Ricoh வின் MFPs என்பதன் வர்ணத் தெரிவுகள் மாபெரும் வியாபார ஸ்தாபனங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன் அச்சிடும் வேகத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன் நிமிடத்துக்கு 20 முதல் 60 பக்கங்கள் வரை அமைந்துள்ளன.

இதேவேளை, கறுப்பு மற்றும் வெள்ளை MP 305+SPF என்பது, அமைதியானது என்பதுடன், சகாயமானதான MFP ஐ கொண்டுள்ளது. உயர் தரம் வாய்ந்த பிரின்ட்கள் ஃபக்ஸ்கள், போட்டோ கொப்பிகள் மற்றும் ஸ்கான்கள் ஆகியவற்றை நிமிடமொன்றுக்கு 30 பக்கங்கள் எனும் அடிப்படையில் வழங்குகின்றது. 

இந்த அச்சியந்திரம், A4-  அளவு பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன் A3 அளவு கொப்பிகளையும் தயாரிக்கக்கூடியது. பாவனையாளரின் அச்சிடும் அனுபவத்தை மாற்றியமைக்கும் திறன் மற்றும் உள்ளம்சங்களைக் கொண்ட இந்த இயந்திரம், Wi-Fi வலையமைப்புகள் ஊடாக எந்தவொரு சாதனங்களையும் இணைக்கும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.

அதன் மூலம் பாவனையாளர்களுக்கு, LAN/WAN வலைப்பின்னல் மூலம் அச்சிடல் செயற்பாடுகளை remote access ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். அச்சியந்திரத்துக்கு ஆவணங்களை வெவ்வேறு சாதனங்கள் ஊடாக மாற்றுவதற்கான தேவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

Ricoh வின் விருது வென்ற தெரிவுகளில், மேலும் பல புத்தாக்கமான உள்ளம்சங்கள் அடங்கியுள்ளன. இதில், மனித இனங்காணல் உணரி காணப்படுகிறது. பாவனையாளர் எவரும் உபயோகிக்காத நிலையில், இயந்திரத்தை தன்னியக்கமாக தற்காலிகமாக செயலற்ற நிலைக்கு மாற்றுவதுடன் உபயோகிக்க எத்தணிக்கும் போது, செயற்படுத்துகிறது.

தமது அச்சுப்பிரதித்தீர்வுகளை கையாள்வது மற்றும் செலவுகளை குறைப்பது தொடர்பில் வியாபாரங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், போட்டிகரமான விலையிலமைந்த சேவைகள் மற்றும் சாதனங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அதன் பங்காளர்களுடன் இணைந்து Gestetner செயலாற்றி வருகிறது. prints-to-profits (P2P) முறையில் கம்பனி முன்னோடியாக செயலாற்றுவதுடன் வாடிக்கையாளர்கள் போட்டோபிரதி செயற்பாடுகளை வெளிக்கள அடிப்படையில் வழங்கி, தமது பாவனை அடிப்படையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ள உதவும் வகையில் அமைந்துள்ளது.

இதுபோன்ற நெகிழ்ச்சியான மற்றும் புத்தாக்கமான சேவைகள் சர்வதேச சந்தைகளில் அதிகளவு புகழ்பெற்றுத் திகழ்வதுடன் இலங்கை கூட்டாண்மை நிறுவனங்கள் மத்தியில் 2003ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் Gestetner முன்னோடியாக திகழ்கின்றது.

70 வருடங்களாக இலங்கையில் வியாபாரங்கள் செயற்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, Gestetner தொடர்ச்சியாக தனது பொருட்கள் மற்றும் சேவை வழங்கல்களை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கமான சேவை வழங்கல்கள் ஊடாக மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன் அதிகரிப்புகள் ஆகியன கிடைத்துள்ளன. Gestetner என்பது நாட்டின் நம்பிக்கையை வென்ற மொத்த காகிதாதிகள் தீர்வுகள் வழங்குநராக உயர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57