இளவயது கர்ப்பம், பிரசவங்கள் - காரணம் கொரோனா

Published By: Digital Desk 4

12 Apr, 2021 | 06:40 AM
image

கொரோனா தொற்று காரணமாக பூகோள ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளை  வரிசையாக அடுக்கலாம். எனினும் சமூக ரீதியாக ஏற்பட்ட சீரழிவுகள் குறித்து இப்போதே சில சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் பிரதானமானது  இளவயது கர்ப்பம் மற்றும் பிரசவங்கள்.  

குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இந்த பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார ஸ்தாபனமானது, கொவிட் காலத்தில் இது மிகவும் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளது. 

இந்த அமைப்பின் புள்ளி விபரங்களின் படி  15– 19 வயதுக்கிடைப்பட்ட பெண்களில்   சுமார்  1 கோடியே 20 இலட்சம் பேர் வருடந்தோறும் கர்ப்பத்துக்குள்ளாகும் அதே வேளை இதில் 15 வயதுக்குட்பட்ட 7 இலட்சத்து 77 ஆயிரம் பேர் குழந்தைகளை பிரசவிப்பதாகத் தெரிவிக்கின்றது.

கர்ப்பகால அல்லது பிரசவத்தின் போதான மரணங்களுக்கு அதிகளவில் முகங்கொடுக்கும் பெண்கள் இந்த வயதுக்குட்பட்டவர்களே என்பது முக்கிய விடயம். இந்த நிலைமைகள்  காரணமாக குறித்த வயதுடையோருக்கு  வருடந்தோறும் இடம்பெறும் சட்டவிரோத கருக்கலைப்புகளின் எண்ணிக்கை உலக அளவில் 56 இலட்சமாகும். 

இதில் 39 இலட்சம் கருக்கலைப்புகள் ஆபத்தான முறையில் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக தாய் இறப்புஇ நிரந்தர நோயுறும் தன்மை மற்றும் நீடித்த சுகாதார பிரச்சினைகளுக்கு இவர்கள் முகங்கொடுக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க கொவிட் தொற்று காலத்தில் உலகளவில் சுமார் 194 நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அச்சந்தர்ப்பத்தில் பல மாணவிகள் இளவயது கர்ப்பத்துக்கு முகங்கொடுத்ததாக தெரிவித்துள்ளது. 

ஆபிரிக்கா கண்டத்தின் உபசகாரா பிராந்தியத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட 17 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சம் என்ற அதிர்ச்சி தகவலை வேர்ல்ட் விஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொவிட்டுக்கு பின்னரான பாடசாலைகள் ஆரம்பித்துள்ள சூழ்நிலையில் இந்த ஒரு மில்லியன் மாணவிகளும் பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர். 

எமது நாடான இலங்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை மறுக்க முடியாதுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் துஷ்பிரயோகம் மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை மாணவிகள் கர்ப்பம் தரித்துள்ளதுடன் குழந்தைகளையும் பிரசவித்துள்ளனர் என்பது வேதனை செய்தி. நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இவ்வாறான 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. 

எனினும் இதன் பின்னணி காரணங்களை ஆராய்தல் மிக முக்கியம். தொற்று காரணமாக நாடு முற்றாக முடக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மேற்குறித்த மாணவிகளில் பெற்றோர்களுடன் தங்கியிருந்தவர்களை விட உறவினர்கள் மற்றும் ஏனையோருடன் தங்கியிருந்தவர்களே இவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

பெற்றோர்களுடன் இருந்தாலும் கூட அவர்களின் குடியிருப்புகளுக்கு வந்து சென்ற உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களால் மாணவிகளுக்கு இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் இது குறித்து குடும்பத்தினரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கவில்லை.

அதேவேளை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டவுடன் குறித்த மாணவிகள் தமக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையின் விபரீதத்தை அறியாது பாடசாலைகளுக்குச் சென்றிருக்கின்றனர். அவர்களின் உடலியல் ரீதியான மாற்றங்களை வீட்டில் பெற்றோர்களோ அல்லது அவர்களது உறவினர்களோ அறிந்திருக்க வில்லையென்பது முக்கிய விடயம்.

இந்நிலையில் பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் இவ்வாறு பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்த ஒரு சாரார் தமது பாடசாலைகளிலும் இருப்பார்கள் என்பதை எந்த பாடசாலை சமூகங்களும் அறிந்திருக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே காணப்பட்டன.

உயர்தர இ சாதாரண தர மற்றும் புலமை பரிசில்  பரீட்சைகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தல் செயற்பாடுகள் உள்ளிட்டஇ பாடசாலை கட்டமைப்பை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் செயன்முறைகள் வரை கல்வி சமூகத்துக்கு பாரிய சவால்கள் பூதகரமாக முன்னெழுந்து நின்றன.

இந்நிலையில் கடந்த வருடத்தில் இடம்பெற்ற இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்களின் விளைவுகளை இந்த வருடத்தில் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு பாடசாலை சமூகங்களும் பெற்றோர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.  தற்போது எமது நாட்டில் கொவிட் தொற்று முழுமையாக நீங்கி விட்டது என்று கூற முடியாது. மீண்டுமொரு முழு அடைப்புக்கு நாடு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டால் தமது பிள்ளைகளை இவ்வாறான பிரச்சினையிலிருந்து  எவ்வாறு பாதுகாப்பது என்ற எச்சரிக்கை உணர்வு பெற்றோர்களுக்கு உருவாவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

 இது தொடர்பில் பாடசாலை மட்டத்திலிருந்து பெற்றோர்களுடனான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படல் அவசியமாகும். பாதிக்கப்பட்ட மாணவிகள் பலருக்கு தமக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது குறித்து தெரிந்திருக்கவில்லையென்பது விசாரணைகளிலிருந்து அறிய முடிகின்றது. பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வையும் தேவையையும் இச்சம்பவங்கள் உணர்த்தியுள்ளன என்றால் மிகையாகாது. கலவன் பாடசாலைகள் அல்லது பெண்கள் மட்டும் கல்வி கற்கும் பாடசாலைகளில் இது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பை பாடசாலை சமூகங்கள் கொண்டிருக்கின்றன. 

மட்டுமின்றி பல காரணங்களுக்காக பெற்றோரை தவிர்த்து பாதுகாவலர்கள் அல்லது உறவினர்களுடன் தங்கி கல்வி பயிலும் மாணவிகள் குறித்த பாதுகாப்பை உரிய தரப்பினர் உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43