பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 

Published By: Digital Desk 4

11 Apr, 2021 | 08:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு  பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒரு முறை மாத்திரம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை வழங்க  விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி, கிராம சேவகர், பிரதேச செயலகம் ஊடாக இக்கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தரப்பினர் பெற்றுக் கொள்ளும் மாத கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக  ஒரு முறை மாத்திரம் 5  ஆயிரம் ரூபாவை மேலதிக கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சமுர்த்தி பயனாளர்கள், குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்கள், விசேட தேவையுடையவர்கள் உள்ள குடும்பம், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் உள்ள குடும்பங்கள், 100 வயதை பூர்த்தி செய்த முதியோர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்கள், மேன்முறையீடு செய்ய  தகுதி பெற்றுள்ள குடும்பங்கள் ஆகிய தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு முறை மாத்திரம் 5000 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இக்கொடுப்பனவு வழங்கப்படும். கொடுப்பனவுகளை பெற தகுதியுடையவர்கள் உரிய அதிகாரிகளுடன் தொடர்புக் கொண்டு கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள  முடியும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை  முழமையாக கடைப்பிடிப்பது  அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

33 ரயில் சேவைகள் இரத்து 

2024-11-14 13:55:28
news-image

காலி சிறைச்சாலையில் கைதி தப்பியோட்டம்!

2024-11-14 13:49:39
news-image

குளவி கொட்டுக்கு இலக்காகி 17 முன்பள்ளி...

2024-11-14 13:42:58
news-image

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 ...

2024-11-14 13:35:09
news-image

அநுராதபுரத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர...

2024-11-14 13:28:31
news-image

கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

2024-11-14 13:31:43
news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : நண்பகல்...

2024-11-14 13:26:05
news-image

மன்னாரில் 6 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள்...

2024-11-14 13:05:52
news-image

யாழ்ப்பாணத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 13:08:46
news-image

வவுனியா நகர் எங்கும் வீசப்பட்டுள்ள கட்சி...

2024-11-14 12:46:59
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-14 12:47:24
news-image

திருகோணமலையில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 12:13:23