முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றியதாகவும், அதனால் அவர்களுக்கு புற்றுநோய் சார்ந்த நோய்கள் ஏற்பட்டு அவர்கள் உயிரிழப்பதாகவும் வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தெல்கொட ஸ்ரீ சம்போதி விகாரையில் வைத்து ஊடகவியாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மெற்கொண்டு அதற்கான நடவடிக்கைளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில்  சில அரசியல்வாதிகள் மக்களிடத்தில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு நாட்டின் நல்லிணக்கத்திற்கு சவால் விடுப்பது கவலைக்குரிய செயல் என அவர் தெரிவித்துள்ளார்.