(இராஜதுரை ஹஷான்)

பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படமாட்டாது.விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நிர்ணய விலைக்கு அதிகமாக விலையில் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில்  நுகர்வோர் 1998 என்ற தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யலாம். விற்பனை  நிலையங்கள் தொடர்பில் கண்காணிக்க நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுவார்கள் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வங்கிக்கடன் 7 சதவீதத்தால் குறைக்கப்படும்': பந்துல குணவர்தன | Virakesari.lk

வர்த்தகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் காலங்களில்  எக்காரணிகளுக்காகவும் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படமாட்டாது. பண்டிகை காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்குமாறு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பிற்கு எத்தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

கோழி இறைச்சி விலை  தொடர்பில் 2020 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.சந்தையில்  தோல் நீக்கப்படாத ஒரு கிலே கிராம் கோழி இறைச்சியின் விலை 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

தோல் நீக்கப்படாத ஒரு கிலோ கோழி இறைச்சி  சதொச விற்பனை நிலையங்களில்  400 ரூபாவிற்கு விற்பனை செய்ய்யப்படும்.

கோழி இறைச்சியின்  நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் அதிக விலைக்கு கோழி இறைச்சியை விற்பனை செய்வதாக அறிய முடிகிறது.இவ்வாறான செயற்பாடுகள் குறித்து நுகர்வோர் 1998 என்ற தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக அழைத்து முறைப்பாடு செய்ய முடியும்.

சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள், விலை தொடர்பில் ஆராய நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுவார்கள். 

கட்டுப்பாட்டு விலைக்கு  அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .