'மணி' கைதும் விடுதலையும்

Published By: Digital Desk 2

11 Apr, 2021 | 07:13 PM
image

நமது அரசியல் நிருபர்

யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணி வண்ணன் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை இரவே பிணையில் செல்வதற்கு யாழ்.மாவட்ட நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டார். 

கடந்த புதன்கிழமையன்று யாழ்.மாநகர எல்லைக்குள் பணியாற்றுவதற்காக காவல்  படையொன்றை அறிமுகப்படுத்தினார் யாழ்.மேயர் மணிவண்ணன். காவல்படையை அமைப்பதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறதா ? இல்லையா..? என்ற வாதப்பிரதிவாதங்களைக் கடந்து பேசுபொருளானது காவல்படை உறுப்பினர்கள் அணிந்திருந்த வெளிர் மற்றும் கடும் நீல நிற சீருடை.

இது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறை பிரிவு அணிந்திருந்த சீருடையுடன் முழுவதுமாய் ஒத்துப்போயிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவலானது. எனினும், கொழும்பு மாநகர சபையின் வாகனத்தரிப்பிட பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் ஊழியர்களை பின்பற்றியே யாழிலும் காவற்படை உருவாக்கப்பட்டது என்று விளக்கமளித்தார் மணிவண்ணன். 

தென்னிலங்கையில் பற்றிய தீ

எனினும், யாழ்.மாநகர காவல்படை உருவாக்கம் மற்றும் சீருடை விவகாரம் தென்னிலங்கையில் கடந்த வியாழக்கிழமை அளவில் 'கொதிநிலையை' ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கிங் நெல்சன் இந்த விடயத்தினை பாராளுமன்றத்தில் கொழுத்திப்போட்டார். (கிங் நெல்சன், முன்னாள் அமைச்சர் எச்.ஜி.பி.நெல்சனின் புதல்வர்) இதையடுத்து பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. 

இதன்போது, எதிர்க்கட்சி, ஆளும் கட்சியின் தாக்குதல்களை தனியாளாக நின்று முகங்கொடுக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் 'அவர் யாழ்.மாநகர சபையில் அமைச்சர் டக்ளஸின் உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்தவர்' என்று தடாலடியாகக் கூறினார். இந்தக் கூற்று சொற்ப நேரத்திலேயே கடுமையான விமர்சனத்திற்கு இலக்கானது. 

சார்ள்ஸின் விளக்கம்

மணிவண்ணன் விவகாரம் சபைக்குள் வந்ததும், ஏற்கனவே கூட்டமைப்பின் உறுப்பினர்களை விடுதலைப்புலிகளின் எச்சங்களாக கருதிக்கொண்டிருக்கும் சிங்கள உறுப்பினர்களுக்கு அது வாய்ப்பாகிப் போனது. ஆகவே நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்ப்பதற்காகவே அவ்வாறான 'திசை திருப்பலைச்' செய்துள்ளதாக அவர் ஊடகவியலாளர் ஒருவரிடத்தில் கூறியிருந்தார். 'தான் அவ்வாறு கூறியதும், பொங்கி எழுந்தவர்கள் அடங்கிப்போய்விட்டனர்' என்றும் அவர் குறிப்பிட்டார். 

பாதுகாப்பு அமைச்சு சார் கூட்டமும் சாணக்கியனின் அதிர்ச்சி நடத்தையும்

தொடர்ந்து பாராளுமன்றதில் 'பாதுகாப்பு அமைச்சு சார்' கூட்டமொன்று ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த வியாழக்கிழமை மாலை பாராளுமன்ற முதலாம் இலக்கக் குழு அறையில் நடைபெற்றது. ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு, சட்டத்துறை அதிகாரிகள் என்று நிரம்பி வழிந்தது அந்த அறை. கூட்டம் ஆரம்பமாகி சற்று நேரத்தின் பின்னர் அந்த அறையினுள் வந்த கூட்டமைப்பின் சாணக்கியன் எம்.பி. நேரடியாக ஜனாதிபதி கோட்டாபயவிடம் சென்று சில நிமிடங்கள் உரையாடி விட்டு பின்னரே இருக்கைக்கு சென்றிருந்தார். 

இந்த செயலை அந்த அறையில் இருந்த அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்து பார்த்துக்கொண்டிருந்தனர். நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டமும் சற்று நிமிடங்கள் நிசப்தமானது என்கிறார்கள் அதில் கலந்து கொண்டவர்கள். 

இந்தக் கூட்டத்தின் போது, மணிவண்ணனின் காவற்படை, சீருடை விவகாரம் கவனத்திற்கு கொள்ளப்பட்டது. அவரை விசாரணைக்கு உட்படுத்துவதென்றும் அங்கு தீர்மானிக்கப்பட்டது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-04-11#page-19

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15