(எம்.ஆர்.எம்.வசீம்)

அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் நாளை அரச மற்றும் தனியார் வங்கிகள் திறக்கப்படும் என பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள்  அமைச்சின் செயலாளர் ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: Important announcement | Virakesari.lk

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளை 12ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அந்த விடுமுறை அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு பொருந்தாது. இன்று மற்றும் நேற்று விடுமுறை தினமாகும். அதேபோன்று  13 மற்றும் 14ஆம் திகதி புத்தாண்டு விடுமுறை இருப்பதால் இடையில் திங்கட் கிழமை மாத்திரமே அரச அலுவலகங்களில் வேலை நாளாக இருந்தது. 

அதனால் நாளை 12ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்குமாறும், அன்றைய தினம் அரச காரியாலயங்களை திறப்பதைவிட விடுமுறைவழங்குவது நல்லது என விசேட கோரிக்கை ஒன்று இருந்தது. அதன் பிரகாரம் அரச ஊழியர்களின் வசதி கருதி நாளை திங்கட்கிழமை விசேட விடுமுறையாக அறிவிப்பு செய்யப்பட்டது.

மேலும் திங்கட்கிழமை வங்கி மற்றும் வேறு அத்தியாவசிய தேவைகள் இருக்கின்றன. அதனால் நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டாலும் அது வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக கருதப்படமாட்டாது.

இதேவேளை, நாளை திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொது மக்கள் சேவைக்காக திறந்திருக்கும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார். 

நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹர காரியாலங்களில் சேவையை பெற வருவோர்  0112677877 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.