இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வெற்றிகொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது - விமல் 

Published By: Digital Desk 4

11 Apr, 2021 | 05:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 நாட்டின ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிக் கொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது.

அரசாங்கத்தின் இலக்கை திசைத்திருப்ப பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன. என கைத்தொழில்  அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை விற்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்பித்தால், அதற்கெதிராக  தீர்மானம் எடுக்கப்படும்: விமல் வீரவன்ச | Virakesari.lk

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆட்சியதிகாரததை கைப்பற்றி குறுகிய காலத்தில் அரசாங்கம் பல சவால்களை எதிர்க் கொண்டுள்ளது.இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்ட சவால்களை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக் கொண்டுள்ளது.நல்லாட்சி அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம்  அரச ஆதரவுடன் எழுச்சிப்பெற்றது.

ஜெனிவா விவகாரம் அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவததினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது. ஜெனிவா விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனதை அரசாங்கத்தின் சூழ்ச்சி என எதிர்தரப்பினர் குறிப்பிட்டுக் கொண்டு பராளுமன்றில் முறையற்ற வகையில் செயற்பட்டார்கள்.  வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரி வு செய்யப்பட்டதும் எதிர்க்கட்சியினர் அமைதியடைந்து விட்டார்கள்.

அரசாங்கத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறை  செல்லவில்லை. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே அவர் சிறை சென்றுள்ளார் என்பதை எதிர் தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும். ரஞ்சன் ராமநாயக்கவின் விவகாரத்துக்கு அரசியல் ரீதியில் இனியொருபோதும் தீர்வு காண முடியாது.

நாட்டின் ஒற்றையாட்சி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. பலவீனப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி முறைமையின்அம்சங்களை பாதுகாக்க  அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01