நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான  வீதியின் மோகினி எல்ல பகுதியில் சிரிய ரக கார் ஒன்று வேக கட்டுபாட்டை இழந்து மவுசாகல நீர் தேக்க பகுதியில் தடம் புரண்டு மரத்தில் சிக்கியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விபத்தில் சாரதிக்கும், பெண் ஒருவருக்கும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் 1990 ஆம்புயூலன்ஸ் மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதோடு விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.