ஜெனிவா தீர்மானத்தின் நோக்கம் குறித்து அமெரிக்க தூதுவரின் விசேட செவ்வி

Published By: Digital Desk 2

11 Apr, 2021 | 05:12 PM
image

நேர்காணல்:- லியோ நிரோஷதர்ஷன்

  • கணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பதில் அவசியம்

  • இலங்கை, அமெரிக்க தவறான புரிதலை ஏற்படுத்த முயற்சி

  • எம்.சி.சி. உடன்படிக்கைக்கு எந்தவிதமான பதிலீடும் இல்லை

  • ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முழு நிறைவானது அல்ல

ஜெனிவா தீர்மானம் இலங்கையை பலவீனப்படுத்துவது அல்லது அதனை நவீன காலனித்துவ நோக்கங்களுக்கு உட்படுத்துவது என்று கொள்ளப்படுவதை நான் நிராகரிக்கிறேன். மாறாக சர்வதேச மனித உரிமைகளின் அடிப்படை கொள்கைகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கும் நடைமுறையில் அந்த கொள்கைகள் தொடர்பான அமுலாக்கத்துக்கும் இடையிலான இடைவெளியை சுருக்குவதற்கான அழைப்பொன்றாகும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் வழங்கிய முழுமையான செவ்வி வருமாறு, 

கேள்வி:- மேற்குலக நாடுகளிடம் இருந்து இலங்கை தற்போது தம்மை தாமகவே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. அப்படியென்றால் இந்த போக்கு பற்றி உங்களால் விபரிக்க முடியுமா?

பதில்:-  உலகளாவிய தொற்றுநோய் பரவலுடன் ஒவ்வொரு நாடும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. குறிப்பாக பொருளாதார ரீதியாக இணைந்துள்ளன. தனிமைப்படுத்தப்படும் பட்சத்தில் பொருளாதார ரீதியாக தம்மை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய எந்த நாடும் கிடையாது.

குறிப்பாக அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருக்கிறது. ஏறக்குறைய 180,000 இலங்கை தொழில் வாய்ப்புகளுக்கு அமெரிக்க நுகர்வோர் பொறுப்பாக இருக்கின்றனர். ஆகவே நாடுகள் இணைந்து செயற்படுவதிலேயே பொருளாதாரங்கள் தங்கியுள்ளன.

அனைத்து நாடுகளினதும் பாதுகாப்புக்காகவும் இறையாண்மை மற்றும் பொருளாதார நலனின் பாதுகாப்புக்காகவும் வணிகங்கள் போட்டியிடுவதற்கும் நாடுகள் அதன் ஒப்பந்தங்களில் இருந்து சிறந்த பெறுமதியை பெறுவதற்கும் நியாயமான வாய்ப்பொன்றை வழங்கும் சுயாதீனமானதும் திறந்ததுமான பொருளாதார வாய்ப்பை அமெரிக்கா ஆதரிக்கிறது. 

கேள்வி:- மேற்குலகுக்கு எதிரான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கையுடன் அனைத்து துறைகளிலும் அமெரிக்கா எவ்வாறு உறவுகளை வலுப்படுத்தப் போகிறது?

பதில்:- இலங்கையுடனான அமெரிக்காவின் ஈடுபாடுகளை சுற்றிலும் தவறான புரிதலை உருவாக்கும் முயற்சி இருப்பதாக தெரிகிறது. அது துரதிரஷ்டவசமானது என்பதுடன், இறுதியில் இலங்கையே அந்த பிரசாரத்தினால் பாதிக்கப்படுகிறது. 

ஆனால் அரசாங்கத்துடனான உறவிலிருந்தோ அல்லது எமது உரையாடல்களிலிருந்தோ நாம் பின்வாங்கவில்லை. அமெரிக்க, இலங்கை உறவானது 70 வருடங்களையும் விடவும் பழமையானது. நாம் போசிப்பது நீண்டகால உறுதிப்பாடொன்று என்பதுடன், நீண்டகால உறவொன்று என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம்.

இலங்கையுடனான எமது பங்காண்மையை ஆழமாக்கிக் கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கும் ஒரு வழி அதனது பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதாகும். சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் ஊடாக தொழில் வாய்ப்புகளையும் எதிர்கால வளர்ச்சியையும் உருவாக்குவதற்கு தனியார் துறையினர் சாந்த ஏனையவர்களுடனும் நாம் இணைந்து பணியாற்றுகிறோம். 

கேள்வி:- எம்.சி.சி. ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதன் பின்னர், எம்.சி.சி. திட்டத்தை பதிலீடு செய்வதற்கு அமெரிக்காவினால் ஏதேனும் புதிய நகர்வொன்று மேற்கொள்ளப்படுமா?

பதில்:- இலங்கை அரசாங்கத்திடம் இருந்தான வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே உத்தேச எம்.சி.சி. அபிவிருத்தி அன்பளிப்பு உதவித்தொகை முன்வைக்கப்பட்டது. ஈடுபாடின்மை காரணமாக இந்த முன்மொழிவு வாபஸ் பெறப்பட்டதுடன், அந்த நிதிகள் வேறு இடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

இலங்கை அரசாங்க அமைச்சுகளினாலும் வரிசெலுத்தும் அமெரிக்க மக்களின் செலவில் நிறைவுசெய்ய பல ஆண்டுகள் எடுத்த வடிவமைப்பு முயற்சியொன்றான கல்விசார் ஆய்வினாலும் அடையாளம் காணப்பட்ட போக்குவரத்து மற்றும் காணி நிர்வாக துறைகளிலான தேவைகளை பூர்த்திசெய்வதற்காக கோரப்பட்ட இந்த கடனற்ற அபிருத்தி உதவித் தொகைக்கு பதிலீடு எதுவும் இருக்காது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-11#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...

2025-03-16 15:25:50
news-image

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்

2025-03-16 14:51:10
news-image

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...

2025-03-16 15:03:08
news-image

ஈரான் மூலோபாயம்

2025-03-16 13:25:56
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே

2025-03-16 13:07:00