இன்னொரு நாடகத்துக்கு தயாராகும் இலங்கை

Published By: Digital Desk 2

11 Apr, 2021 | 01:08 PM
image

ஹரிகரன்

“விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்த வரையில், இலங்கை அரசாங்கம் இந்தியாவின் பிடியை விட்டு விலகிச் சென்றிருக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலகட்டத்தில் தான், இலங்கை அரசாங்கம் சீன சார்பு அரசாக மாற்றம் பெற்றது. தற்போது இலங்கை மீதான இந்தியாவின் கடிவாளம் கழன்று போய் விட்டது”

மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான தயார்படுத்தல்கள் இடம்பெறுவதாக கூறப்பட்டாலும் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இருக்கிறதா என்ற நியாயமான சந்தேகம் உள்ளது. இந்தியாவுக்கு தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி கொடுத்து விட்டாலும், அந்த வாக்குறுதியை காப்பாற்றும் அர்ப்பணிப்பு இலங்கைக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டு, ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர், இந்தியா அதன் பெறுமானத்தை உணரக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் தனிநாடு கேட்டுப் போராடிய விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களை 1980களின் தொடக்கத்தில் இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் மறைமுகமாக ஆதரித்து வந்தது.

ஆயுதங்கள், பயிற்சிகள் இந்தியாவினால் கொடுக்கப்பட்டன. அது தமிழ் மக்களினது நலன்களைக் கருத்தில் கொண்ட, இந்தியாவின் பரிவு என்ற நம்பிக்கைகள் இருந்தாலும், இந்தியாவின் நோக்கம் அதுவல்ல.

தமது நலன்களை உறுதிப்படுத்துவதே அதன் பிரதான இலக்காக இருந்தது. பனிப்போர் காலத்தில், ஆயுதப் போராட்ட அமைப்புகளை, உருவாக்கி வளர்த்தெடுத்து, குறிப்பிட்ட நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்வது, ஒரு முக்கியமான உத்தியாகவே கையாளப்பட்டது.

அதனை  அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் மத்திரமன்றி,  இந்தியா, கியூபா, தென்னாபிரிக்கா போன்ற பல நாடுகளும் கூட கையாளத்தவறவில்லை.

உள்நாட்டுப் போர்களை உருவாக்கி அல்லது ஊக்குவித்து தமது படைகளை அங்கு நிறுத்துதல் அல்லது தமது நலன்களை உறுதிப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுதலே, இவ்வாறான தலையீடுகளின் பிரதான நோக்கமாக இருந்திருக்கிறது.

அங்கோலாவில் கியூபா தனது படைகளை நிறுத்தியதும், நமீபியாவில் தென்னாபிரிக்கா தனது படைகளை வைத்திருந்ததும், இலங்கையில்,  இந்தியா தனது படைகளை நிலைப்படுத்தியதும் இவ்வாறு தான்.

இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையீடு செய்வதற்கு விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்கள் பலமடைய வேண்டிய தேவை இருந்தது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-04-11#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் முதல் முறையாக சூரியனை மிக...

2023-12-11 18:05:44
news-image

இலங்கையில் தொடரும் பொலிஸாரின் மனித உரிமை...

2023-12-11 17:19:03
news-image

மக்ஹெய்சர் விளையாட்டரங்கு சமூக சீர்கேடுகளின் அரங்கமா? 

2023-12-11 14:40:57
news-image

மன்னார் மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியும் தலைமன்னார்...

2023-12-11 14:32:10
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கோரமுகம்

2023-12-11 13:46:00
news-image

காசா டயறி - "சான்டா, இம்முறை...

2023-12-11 11:39:34
news-image

படைக்குள் உருவாகும் குழப்பம்

2023-12-10 22:59:03
news-image

பிரித்தானியாவின் பதில் என்ன?

2023-12-10 23:00:23
news-image

கடைசி மூச்சை இழுத்து கொண்­டி­ருக்­கி­றது இஸ்ரேல்

2023-12-10 23:17:37
news-image

ஒல்­லாந்தில் இஸ்­லா­மிய வெறுப்­பா­ளரின் தேர்தல் வெற்றி...

2023-12-11 10:44:32
news-image

அதிர்வுகளை ஏற்படுத்தப்போகும் தலைமைத்துவ போட்டி

2023-12-10 23:19:47
news-image

ஹென்றி கீசிங்கரும் வரலாற்றில் அவரின் வகிபாகமும்

2023-12-10 23:07:09