சினோபார்ம் விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியது இலங்கையே : உள்ளக விவகாரத்தில் தலையிடமுடியாது என்கிறது சீனா

11 Apr, 2021 | 10:31 AM
image

(ஆர்.ராம்)

சினோபார்ம் கொரோனா தடுப்பூசி விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியது இலங்கையே. உள்ளக விவகாரத்தில் எம்மால் தலையீடு செய்யமுடியாது என்று இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஆறு இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை சீனா வழங்கியிருந்தது. இதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் வெளிப்படுத்திய எதிர்ப்பின் காரணமாகரூபவ் இலங்கை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரையில் சினோபார்ம் யாருக்கும் வழங்கப்படாது என்றும் இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

சினோபார்ம் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் வரை இலங்கையர்களுக்கு அது பயன்படுத்தப்படாது அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும்ரூபவ் நாட்டில் ஏற்கனவே கொண்டுபரவ்பட்பட சினோர்பார்ம் தடுப்பூசியானது தடுப்பூசியின் பாதுகாப்பு செயற்திறன்ரூபவ் தரம் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஊடாக முறையான அனுமதி அளிக்கப்படும் வரை அத்தடுப்பூசியை பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இந்த மனு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசி ஏனைய சதாரண பொதுமக்களும் விநியோகம் செய்யப்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைரூபவ் குறித்த தடுப்பூசி தொடர்பில் ஆராய நியமித்த நிபுணர் குழுவின் விபரங்களையும் தடுப்பூசி தொடர்பில் கோரிய விடயங்களையும் வெளிப்படுத்த பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

எனினும் கொழும்பில் உள்ள அனைத்து சீன பிரஜைகளுக்கும் சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீன தூதரகத்தின் ஊடகப்பேச்சாளரும்ரூபவ் அரசியல் பிரிவுத் தலைலவருமான லு சொங் கூறுகையில்,

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே சீன அரசாங்கமும் பொதுமக்களும் 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை யாருக்குரூபவ் எங்கு எப்படி வழங்க வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அது அந்நாட்டின் உள்ளக விவகாரமாகும். அதில் சீனா ஒருபோதும் தலையிடப்போவதில்லை.

மேலும் இலங்கையில் தங்கியுள்ள மூன்று முதல் நான்கு ஆயிரம் வரையிலான சீனர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

அதேநேரம் சீனா இதுவரையில் தனது நட்பு நாடுகளுக்காக 133.8மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56