நடிகைகள் தற்போதெல்லாம் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் என்று சொன்னாலும், தமிழ் படத்தில் நடித்துவிட்டால் அப்படத்திற்கான விளம்பர நிகழ்வில் பங்கேற்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். அதிலும் மலையாளத்திலிருந்து வரும் நடிகைகள் ரொம்ப மோசம் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர். நடிகை நயன்தாரா தொடங்கி லட்சுமி வரைக்கும் இந்நிலை தொடர்கிறது. அதிலும் இந்த நித்யா, ‘முடிஞ்சா இவன புடி’ என்ற படத்தின் ஓடியோ வெளியீட்டிற்கும் வரவில்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கும் வரவில்லை. அதேபோல் இவர் நடித்திருந்த 24 மற்றும் இருமுகன் படத்தின் விளம்பர நிகழ்வுகளிலும் இவர் பங்குபற்றவில்லை. கேட்டால் ஏதோதோ காரணம் சொல்கிறார். ஆனால் அண்மையில் ஹைதரபாத்தில் நடைபெற்ற தெலுங்கு படமொன்றின் ஓடியோ வெளியிட்டு விழாவில் இவர் பங்குபற்றியதன் மூலம் தமிழை ஓரங்கட்டுவது உறுதியாக தெரியவருகிறது.
தமிழை ஒரங்கட்டும் இவர், தற்போது தமிழ் நடிகைகளில் நடிகையர் திலகமாக திகழ்ந்த சாவித்ரியின் சுயசரிதையை திரைப்படமாக எடுக்கவிருக்கும் படத்தில் சாவித்திரியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே இந்த பாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகை வித்யா பாலனிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு பலனளிக்கவில்லை என்பதால் தற்போது இவரை பட இயக்குநர் நாக் அஸ்வின் தொடர்பு கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நித்யா இதில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே தெரியவருகிறது.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM