புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளியேறும் நபர்கள் மீது சீரற்ற விரைவான அன்டிஜென் பரிசோதனைகளை நடத்தும் திட்டம் இன்று முதல் மேற்கொள்ளப்படும்.

எனினும் சீரற்ற அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் வெளியிடப்பட மாட்டாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னர் இடங்கள் வெளிவந்த பின்னர் பொதுமக்கள் கொழும்பில் இருந்து வெளியேற மாற்று வழிகளை கையாண்டதன் விளைவகவே தற்சமயம் இடங்கள் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் மிகுந்த சவாலுக்கு மத்தியில் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சீர்குலையுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தாண்டு காலத்தில் முகக் கவசங்களை அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி நடந்து கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.