இலங்கை - இந்திய பொலிஸாருக்கிடையில் ஏற்பட்ட இணக்கம்

11 Apr, 2021 | 06:58 AM
image

(எம்.மனோசித்ரா)

உலகளாவிய பயங்கரவாத குழுக்கள் மற்றும் ஒழிந்திருக்கும் குற்றவாளிகள் போன்றோர் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக கூட்டாக செயல்படுவதற்கு இலங்கை மற்றும் இந்திய பொலிஸ் பிரதானிகள் இணங்கியுள்ளனர்.

இந்திய - இலங்கை பொலிஸ் தலைமையதிகாரிகள் கலந்துகொண்ட பேராளர்கள் மட்டத்திலான முதலாவது மெய்நிகர் பொலிஸ் பிரதானிகள் மாநாடு வியாழனன்று நடைபெற்றது. இதன் போதே இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இம்மாநாடு தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது :

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை குறிக்கும் வகையில் இப்பேச்சுக்கள் சுமுகமாகவும் வினைத்திறன் மிக்கவகையிலும் இடம்பெற்றன. 

புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் இந்திய தரப்பினருக்கு தலைமை தாங்கிய அதேவேளை இலங்கை பொலிஸ் மா அதிபர் தனது நாட்டின் பேராளர்களுக்கு தலைமை தாங்கியிருந்தார்.

இருநாடுகளுக்கிடையேயான மிகக்குறுகிய கடல்பாதையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஏனைய  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இருதரப்பினராலும்  மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.  

அத்தோடு உளவுத்துறை சார்ந்த மற்றும் ஏனைய பின்னூட்ட கருத்துக்களை நிகழ்நேரத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்தியிருந்தனர். 

உலகளாவிய பயங்கரவாத குழுக்கள் மற்றும் ஒழிந்திருக்கும் குற்றவாளிகள் போன்றோர் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக கூட்டாக செயல்பட இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

மேலெழும் சவால்கள் மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு சவால்களை வினைத்திறன் மிக்க வகையில் உரிய நேரத்தில் கையாள்வதற்காக 'நோடல் புள்ளிகளை' ஸ்தாபிப்பதற்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒத்துழைப்பு பொறிமுறைகளை வலுவாக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பிரதானிகள் மாநாட்டு கட்டமைப்பானது இரு தரப்பினையும் சேர்ந்த பாதுகாப்பு அமைப்புக்களால் ஆதரவளிக்கப்படுவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொலிஸ் படைகளின் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் அதேவேளை இரு நாட்டு மக்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44