கருவிழிக் கூம்பல் (கெரட்டோகோனஸ்) என்றால், கருவிழியின் அடர்த்தி நாளுக்குநாள் குறைந்து கொண்டே வரும். இந்த நிலை தொடர்ந்து பயணித்து இறுதியில் ஒரு கூம்பு வடிவம் போலாகிவிடும். ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு இருக்கும் கருவிழியின் அடர்த்தி, நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வரும். ஒரு புள்ளியில் கண்களில் ஏற்படும் அழுத்தத்தை எதிர்கொள்ள இயலாமல் கூம்பு வடிவத்திற்கு மாறிவிடும். இதைத்தான் கருவிழிக் கூம்பல் என்கிறோம்.
இத்தகைய பாதிப்பை ஆரம்ப நிலை, எஸ்டாபிளிஷ் நிலை, முற்றிய நிலை என மூன்று நிலைகளாக பிரிக்கலாம். 10 முதல் 20 வயதிற்குள் தான் இந்த ஆரம்ப நிலை தொடங்கும். இதனை இந்த நிலையிலேயே கண்டறிந்தால் கொலாஜன் இன்டகிரேடட் என்ற சிகிச்சையின் மூலம் இந்த பாதிப்பினை குணப்படுத்த இயலும்.
இதனையடுத்த நிலையில் இதனை கண்டறியும் போது பார்வை சமச்சீரற்றதாக இருக்கும். இதன் காரணமாக பார்வைத்திறன் குறையத் தொடங்கும். இதற்காக ஸ்பெஷலான கான்டாக்ட் லென்ஸை பொருத்தி தீர்வு காண இயலும். ஒரு சிலருக்கு கருவிழியையும் மாற்றவேண்டியதிருக்கும்.
மூன்றாவது நிலையில் இருக்கும் போது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு முழு கருவிழியையும் மாற்றவேண்டியதிருக்கும். அத்துடன் பார்வை முழு அளவில் திரும்பும் என்ற உறுதியையும் வழங்குவதற்கு இயலாது. அதனால் இத்தகைய பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது தான் சிறந்தது. இதிலும் தற்போது தையலில்லாத கெரட்டோபிளாஸ்ரி என்ற சத்திர சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது. இதன் மூலமாகவும் இதற்கான நிவாரணத்தைப்பெற இயலும்.
டொக்டர் லயோன்னல் ராஜ் M.S.,
தொகுப்பு அனுஷா
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM