புதுவருடத்தை முன்னிட்டு சமுர்த்தி விற்பனைச்சந்தை இன்று சனிக்கிழமை வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா பிரதேசசெயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கலந்துகொண்டார். 

புதுவருடத்தை முன்னிட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி  பொருட்களை  ஒரே இடத்தில் மலிவுவிலையில் பெற்றுக்கொள்ளும்படியாக சமுர்த்தி பயனாளர்களினால் குறித்த விற்பனை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

நிகழ்வில் அதிதிகளாக வேப்பங்குளம் சமுர்த்திவங்கியின் முகாமையாளர் துஸ்யந்திமாலா, மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், சமுர்த்தி பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.